Sunday, August 14, 2011

இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி



விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்த பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தி வருவது குறித்து, இந்த பகுதியில் முன்பே குறிப்பிட்டி ருந்தோம்.

பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம், சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற் கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது.

2,500 நிறுவனங்களில், 4லட்சம் வாடிக்கையாளர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது. பன்னிரண்டு மாதங்கள் இந்த கணிப்பு மேற் கொள்ளப்பட்டது. முடிவுகள் பின் வருமாறு.

புதிய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 பதிந்து பயன்படுத்துவது 83%ஆக உள்ளது. விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இது பாதியாகக் குறைந்து வருகிறது.
ஆனால், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் களில் 60% கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருப்பது விண்டோஸ் எக்ஸ்பி மட்டுமே.

இவை பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் சாதனங்கள், சரி செய்திட முடியாத அளவிற்கு மோசமானால் தான், அவற்றின் இடத்தில் வாங்கப்படும் கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும்.

ஜி-5 வழங்கும் புதிய 2 சிம் மொபைல்கள்



கூடுதல் வசதிகளுடன், பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தரும் ஜி-5 நிறுவனம், அண்மையில் நான்கு புதிய மொபைல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை அனைத்து இரண்டு சிம்களை இயக்கக் கூடிய போன்களாகும். முதல் மூன்று போன்கள் G’Five E680, E620 மற்றும் E650 என அழைக்கப்படுகின்றன. அடுத்ததாக G’FIVE G20 என்ற பெயரில் கேம்ஸ் போன் ஒன்று வெளியிடப்படுகிறது.

இதில் G’Five E680 மொபைல் போன், டூயல் ஸ்டேண்ட் பை சிறப்புடன் கூடிய இரண்டு சிம் போனாகும். 2.2. அங்குல திரை, இரண்டு கேமரா, யமஹா ஆம்ப்ளிபையர், எப்.எம். ரேடியோ பிளேயர், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர் ஆகியன தரப்பட்டுள்ளன.

அடுத்த போன் G’Five E620 மேலே கூறப்பட்டுள்ள வசதிகளுடன், அனலாக் டிவி ஒன்றையும் கொண்டுள்ளது. G’Five E650 போன், 2.5 அங்குல வண்ணத்திரையுடன், பிளிப் டைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று போன்களும் மூவி கிங் போன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த போன் ஒவ்வொன்றுடனும் 4 ஜிபி டேட்டா கார்ட் இணைக்கப்பட்டுத் தரப்படுகிறது.

இதில் 20 திரைப்படங்கள் பதியப்பட்டுத் தரப்படுகின்றன. இப்போதைக்கு இந்தி, பஞ்சாபி, போஜ்பூரி என அந்த மாநில மொழிகளில் இவை உள்ளன.
G’FIVE G20 மொபைல் போனில், 2.4 அங்குல திரை உள்ளது. இதில் ஆயிரம் வீடியோ கேம்கள் பதிந்து தரப்படுகின்றன. யமஹா ஆம்ப்ளிபையர் தரப்பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்ட நான்கு போன்களின் விலை ரூ. 2,500 முதல் ரூ.3,500 வரை உள்ளது.

Monday, August 1, 2011

108 AP

The popular 'lifeline', the 108 EMRI Emergency Service in Uttarakhand, today bounced back to life after being partially paralysed due to a strike yesterday as workers including pilots and paramedics resumed work today. Despite government declaring 108 service under Essential Service Maintenance Act (ESMA), about 750 pilots and paramedics had launched 24 hours boycott and threatened to go on an indefinite strike, if situation called for. The workers of the service running under PPP mode, are demanding that they be regularised as state employees, should not be transferred without notice and reinstatement of three employees ousted under disciplinary action. The workers today resumed work after EMRI Management assured to look into their demands sympathetically, sources here said. Manish Tinku, Chief Operation Officer has said the management was ready to accept all relevant demands of the workers like insurance, mediclaim, transfer policy and leave. The management had given advertisement and planned recruitment process to maintain a back-up, if the strike had continued. UNI JN RJ PR2035